குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!
குழந்தைகள் மீது மறைந்த பிரதமர் நேரு கொண்டிருந்த அளவிலா அன்பு காரணமாக, அவர் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகள் பற்றிக் கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதை வரிகள் இவை!
“உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல;
அவர்கள் இயற்கையின் {கடவுளின்} குழந்தைகள்;
உங்கள் குழந்தைகள், உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி, உங்களிடமிருந்து அல்ல;
உங்கள் குழந்தைகள், உங்களுடன் இருந்தாலும்
உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல;
உங்கள் அன்பை, நீங்கள் அவர்களுக்குத் தரலாம்;
உங்கள் எண்ணங்களை அல்ல;
அவர்களுக்கென்று, தனி சிந்தனைகள் உண்டு……”
குழந்தைகளுக்குச் சுட்டி உலகம் சார்பில், மீண்டும் வாழ்த்துச் சொல்வதில் மகிழ்கின்றோம்!
வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.