2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்று சிறுவர் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.
எழுத்தாளர் யூமா வாசுகி, கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து. “சிவப்பு தலைக்குட்டையணிந்த, மாப்ளார் மரக்கன்று”, ‘ஆண்டர்சன் கதைகள்’, ‘கலிவரின் பயணங்கள்’,’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என ஏராளமான இலக்கிய நூல்களையும், சிறார் இலக்கிய நூல்களையும், ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார்.
ஓ.வி.விஜயனின், ‘கஸாக்குகளின் இதிகாசம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகச் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
யூமா வாசுகி அவர்களுக்கு, மீண்டும் எங்கள் வாழ்த்துகள்!
வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.