கதை, நாடகம், பாடல், மொழிபெயர்ப்பு என்ற் பன்முகம் கொண்ட தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர். இவரது ‘தங்கக் குழந்தைகள்’ என்ற நாடகம், மத்திய அரசின் பரிசைப் பெற்றது. ‘குட்டி யானை பட்டு’, ‘யார் கெட்டிக்காரர்?”,” ஜானுவும் நதியும்” ஆகியவை, இவர் மொழி பெயர்த்தவற்றுள், சில. ‘சிவப்பு ரோஜாப்பூ’ என்ற பாடல் தொகுப்பும், குறிப்பிடத்தக்க படைப்பு.