தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியலை எழுதிவந்த. ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் , முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார்.’கல்வி’ என்ற இதழை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து அறிவியல் தகவல்கள், அறிவியல் புதிர்களைக் கதைகளாக எழுதினார். ‘பண்டை உலகில் பறக்கும் பாப்பா’ (பரிணாமத்தின் கதை), ‘கானகக் கன்னி’ (தாவரங்களைப் பற்றி), ‘மந்திரவாதியின் மகன்’ (பூச்சிகளின் வாழ்க்கை), ‘பாலர் கதைக் களஞ்சியம்’ ஆகியவை, மிகவும் குறிப்பிடத்தக்கவை.. எறும்பு, தேனி பற்றி அவர் எழுதிய ‘மிட்டாய் பாப்பா’ யுனெஸ்கோ பரிசைப் பெற்றது.