அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

Antoine de Exubery photo

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார்.  ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார்.  எழுத்தில் ஆர்வம் கொண்டு 1925 ல், தம் விமானத்துறை அனுபவத்தைப் பின்னணியாக வைத்து, முதல் நூலை வெளியிட்டார்.  நான்காண்டுகள் கழித்து, ‘Southern Mail’ எனும் நூலை எழுதினார். 1931ல் எழுதிய புத்தகம் ‘Night Flight’ பெரும் வெற்றி பெற்றது.  விமான ஓட்டியாக வாழ்ந்த காலத்தில், எழுதிய முக்கியமான புத்தகம், ‘Wind, Sand and Stars’.

இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  1944 ஜூலை 31 ஆம் தேதி, கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து இவர் சென்ற விமானம், திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.  அதனால் இவருக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாமல் மறைந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter to a Hostage’, ‘The Little Prince.’

குட்டி இளவரசன் (The Little Prince) குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான அழகான கதை.  உலக முழுக்க குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில் இடம் பிடிக்கும் நூல்களில் ஒன்று, ‘குட்டி இளவரசன்’.. பிரெஞ்சு நாவலான இது 1943 ல் வெளியானது. 

Share this: