கல்வியாளர் திருமிகு வே.வசந்திதேவி அம்மையார் 01/08/2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகக் கண்ணீர் அஞ்சலி!
இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் (1992-98);
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் (2002-2005);
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்; பிரபல கல்வியாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகங்கொண்டவர்.
பத்மபூஷன் விருது பெற்றவர், வாழ்நாள் சாதனைக்காகச் சக்தி விருதை வென்றவர்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விநலன் காக்கவும், பெண் வாசிப்பு மையம் உருவாக்கவும் இறுதிவரை உழைத்தவர்.
அன்னாருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!
இப்படிக்கு,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.