தேவதையின் கதை – எஸ்.தனிஷ்கா (8 வயது)

Thevathaiyin_kathai_story

கதைக்கான ஓவியம் – எஸ்.தனிஷ்கா

சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

ஒரு ஊரில் ஒரு வீட்டில் வயதான ஒரு பாட்டி இருந்தாங்க. அது ஒரு காடு. அங்க அவர்கள் மட்டும் தனியாக இருந்தாங்க. அவங்களுக்கு இளமையாக ஆக பிடிக்கும். அது மட்டும் இல்லாமல், தேவதையாகவும் பிடிக்கும். சாமியைக் கும்பிடும் பொழுது வேண்டிக் கொள்வார்கள்.

ஒரு நாள் அந்தப் பாட்டி தூங்கிக் கொண்டு இருக்கும்பொழுது, அவங்களுக்கு தேவதையாக மாறுவது போல ஒரு கனவு. காலையில் எழுந்து அந்த பாட்டி சாப்பிட போனாங்க. அப்போது கதவை யாரோ தட்டினாங்க. அந்த பாட்டி வெளியே போய்ப் பார்க்கும்பொழுது அங்கே யாருமே இல்லை.

திரும்பவும் சாப்பிடும்பொழுது ‘டக் டக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. அப்பொழுது கதவை திறக்கும்பொழுது பயங்கரமாக மின்னியது. அப்பொழுது அந்தப் பாட்டி கதவை சாத்திவிட்டு திரும்பும் பொழுது மின்னல் நின்றுவிட்டது.

“பாட்டி, திரும்புங்க” என்ற குரல் கேட்டது.

பாட்டி திரும்பிப் பார்க்கும்பொழுது அங்கே ஒரு ஏஞ்சல் இருந்தது. அப்பொழுது அந்த ஏஞ்சல் கேட்டது, “பாட்டி உங்களுக்கு என்ன ஆசைன்னு சொல்லுங்க”

அந்தப் பாட்டி சொன்னாங்க, “எனக்கு இளமையாக ஆகப் பிடிக்கும், அது மட்டும் இல்லாமல் எனக்குத் தேவதையாகவும் பிடிக்கும்” என்று சொன்னாங்க.

உடனே அந்த ஏஞ்சல் அவர்களை இளமையாகவும், தேவதையாகவும் மாற்றியது. பாட்டி சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே பறந்து போனாங்க. அதுபோல நிறைய நாள் பறந்து பறந்து சுற்றினாங்க.

ஒருநாள் பறந்துவிட்டு வீட்டுக்கு வரும்பொழுது வீட்டில் சாப்பிட காய் ஒன்றும் இல்லை. வெளியே அவர்கள் நட்டு வைத்திருந்த செடிகளையெல்லாம் போய் பார்த்தார்கள். அது எல்லாம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து விட்டது. காய்களும் எதுவும் இல்லை. வீட்டிலும் எல்லாமே தீர்ந்துவிட்டது. பாட்டிக்குப் பசி தாங்கவில்லை. பாட்டி இரண்டு நிமிடம் யோசிச்சாங்க. நாமதான் தேவதையாச்சே, வெளிய பறந்து போய் காய்கறியெல்லாம் பறிச்சுட்டு வரலாம்னு போனாங்க.

வெளியே காட்டிலும் எல்லாச் செடிகளிலும் காய்கள் இல்லை. அது மட்டுமில்லாமல் பாட்டிக்கு எங்கெங்கே தேவையான செடிகள் இருக்கும் என்பதும் மறந்துவிட்டது. பாட்டிக்கு பசி அதிகம் ஆகிவிட்டது. அப்போது மறுபடியும் பாட்டி வீட்டுக்கு வந்து ஏஞ்சலை கூப்பிட்டாங்க. அங்கே வந்த அந்த ஏஞ்சல்,

”எதற்குப் பாட்டி என்னைக் கூப்பிட்டீங்க?” என்று கேட்டது.

அப்போது பாட்டி சொன்னாங்க, “நான் தேவதை, ஆனா சாப்பிட ஏதுவும் இல்லை. வெளியவும் எங்கயும் பழமும் காயும் இல்லை. எனக்கு மேஜிக் பண்ணவும் தெரியாது. என்ன செய்வது?” என்று கேட்டாங்க.

ஏஞ்சல் சொன்னது, “உங்களுக்கு இளமையும் பறக்கும் சக்தியும்தான் குடுத்தேன். ஒருத்தருக்கு ரெண்டுதான் கொடுக்க முடியும், அவ்வளவுதான். அதனால்தான் மேஜிக் பண்ண சொல்லித்தரலை.“ என்றது.

பாட்டி சொன்னாங்க,”எனக்குத் தேவதையாகவே பிடிக்கலை. எனக்குப் பசிக்குது.  எனக்கு எப்பவும் போல் நானே சமைச்சு சாப்பிடணும்” என்றார்கள்.

தேவதை “சரி” என்று சொல்லி, அந்தப் பாட்டிக்குக் கொடுத்த பறக்கும் சக்தியையும், இளமையையும் எடுத்துக்கொண்டது. அது மட்டுமில்லாமல் கொஞ்சம் நாளைக்குக் காய்கறிகள் எல்லாம் கொடுத்தது. அது மந்திர சக்தியால் அவற்றை வரவழைத்துக் கொடுத்தது.

அந்தப் பாட்டியும் நிம்மதியாக உடனே சாப்பிட்டாங்க. அவங்களுக்கு பசி போய்விட்டது. அதுக்கப்புறம் அவங்களே எப்பவும் போல காய்கறி பழங்கள் செடி வளர்த்து பறித்துச் சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக இருந்தாங்க.

நடுவர் கருத்து:-

(நல்ல கற்பனையுடன் கூடிய கருவை எளிய நடையில் சுவாரசியமாகக் கொண்டு முடித்தமைக்குப் பாராட்டுகள்.  தம் கதைக்குத் தாமே அழகாகப் படமும் வரைந்து அனுப்பியது, மிகவும் பாராட்டுக்குரியது)

அன்பு தனிஷ்கா!

மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள்!  உங்களுக்கு ஓவியத் திறமையும் இருப்பதறிந்து மகிழ்ச்சி.  மென்மேலும் கதைப் புத்தகங்கள் வாசித்து வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ வாழ்த்துகிறோம்!

ஆசிரியர்,

சுட்டி உலகம் 

Share this:

4 thoughts on “தேவதையின் கதை – எஸ்.தனிஷ்கா (8 வயது)

  1. அழகான கற்பனை. அருமையான ஓவியம். வளர்க எழுத்துத் திறனும், ஓவிய ஆர்வமும். வாழ்த்துகள்.

    1. அருமை என்ற பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புவனா!

  2. அருமைமா..இருக்கும் நிலை உயர்ந்தது என்ற பெரிய கருத்தை மிக எளிமையாக தந்த தனிஷ்கா விற்கு வாழ்த்துகள்

    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புவனாபாபு!

Comments are closed.