பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.
பண்டித ரமாபாய் மங்களூரில் மராத்திய பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் கல்வி கற்கத் தடை இருந்தது. ஆனால் ரமாபாயின் தந்தை தடையை மீறித் தம் மகளுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். இந்தியாவில் ‘பண்டிதர்’ என்ற பட்டம் வென்ற முதல் பெண் ரமாபாய் தான்.
ரமாபாய் பெண் கல்விக்காகவும், கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்வுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தார். அக்காலத்தில் வழக்கத்திலிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தவும், உடன்கட்டை ஏற்றும் வழக்கத்திலிருந்து பெண்களைக் காக்கவும் போராடினார். பெண்களின் சம உரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய இவரது வாழ்க்கை வரலாற்றை அவசியம் நம் சிறார் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிக எளிய நடையில் ரமாபாயின் வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் நூல்.
வகை_ வாழ்க்கை வரலாறு | சிறார் வாசிப்பு நூல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/-. |