நோபல் பரிசு-இலக்கியம்-2024

HanKang_pic

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே!

இவர் 2007ஆம் ஆண்டு எழுதிய தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்கு, ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசு கிடைத்தது. இதனை எழுத்தாளர் சமயவேல் ‘மரக்கறி’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். தமிழ்வெளி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

வரலாற்றுப் பெருந்துயர் குறித்தும், எளிதில் உடைந்து போகும் பலவீனமான மனித வாழ்வு குறித்தும், ஆழமான கவித்துவ உரைநடையில் எழுதியமைக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

உக்ரைனிலும், காஸாவிலும் நடைபெற்று வரும் போர், தம்மைத் தொந்திரவு செய்வதாகக் கூறுகிறார். “உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால், உலகம் உலகமே இல்லை. நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும், சிறியதாகவும், தொலைவில் இருந்தாலும் அதற்கான நமது பொறுப்புகளை நாம் கைவிட முடியாது” என்று கூறியிருக்கிறார்.  

இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: