(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai)
2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி (Shimon Sakaguchi) ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் முதலில் சொல்லப்பட்ட இருவரும் அமெரிக்கர்கள். மூன்றாமவர் ஜப்பானியர்.
நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி எப்படி வேலை செய்கிறது? வெளியிலிருந்து உள்ளே நுழையும் பாக்டிரியாக்களையும், வைரஸ்களையும் எதிரிகள் என எப்படி இனங்கண்டு அழித்து ஒழிக்கின்றது? அதே சமயம் நம் உடலின் ஆரோக்கியமான நல்ல செல்களை அழிக்காமல் எப்படித் தவிர்க்கின்றது? (for their discoveries concerning peripheral Immunal tolerance) என்பது தொடர்பான ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக வாழ்த்துகள்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.