நோபல் இயற்பியல் விருது – 2024

Hinton_pic

பிரிட்டிஷ்-கனடியப் பேராசிரியர் ஜியோஃபெரி ஹிண்டன் (Geoffrey Hinton), அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பலகலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஹாஃப்பீல்டு(John Hopfield) ஆகியோர் இருவருக்கும், 2024ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.  இருவருக்கும் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

ஹிண்டன் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சிப் பிரிவில், ஞானத் தந்தையாகக் குறிப்பிடப்படுகிறார். இவர் கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இவர்கள் இருவரும் இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி இயந்திரக் கற்றலுக்குத் (machine learning) தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். செயற்கை நரம்பியல் இணைப்புகள் (artificial neural networks) மூலம், இயந்திரக் கற்றலைச் (machine learning) செயல்படுத்தும் அடிப்படைக் கண்டுபிடிப்புகளுக்காக, இப்பரிசு அளிக்கப்படுகிறது.

ஸ்டாக்ஹோமில் வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாள் விழாவில், விருதுகள் வழங்கப்படும்.

Share this: