(Thanks:- Illustration-Niklas Elmehed)
2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் விதமாக எழுதியமைக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1954ஆம் ஆண்டு பிறந்த இவர் சாட்டான்டாங்கோ (Satantango, 2012) என்ற முதல் நாவலை 1985 ஆம் ஆண்டு வெளியிட்டார். 2024ஆம் ஆண்டு ‘ஹெர்ஷ்ட் 07769’ (Herscht 07769) என்ற நாவலை இவர் வெளியிட்டார். சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை இந்த நாவல் துல்லியமாகச் சித்தரிப்பதாகப் பாராட்டப்பெற்றது.
இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக வாழ்த்துகள்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.