தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளின் வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் நூல்களில் இதுவும் ஒன்று.
காட்டூர் கிராமத்துப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஆதனும், அதியனும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் கிராமத்துக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மேற்கு மலைத்தொடரில் அமைந்திருக்கும் மழைக்காடுகளைப் பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய நீண்ட நாள் ஆசை.
ஆதனின் மாமா வேலுமணி என்பவர் வனத்துறை அலுவலராக இருந்தார். ஒரு நாள் நண்பர்கள் இருவரும் அவருடன் சேர்ந்து ஜீப்பில் காட்டுக்குள் பயணம் செய்கின்றனர். அப்பயணத்தின் போது மழைக்காடுகளின் தனிச்சிறப்பு, மழைப்பொழிவின் அளவு, இருவாச்சி பறவை, நீலகிரி லங்கூர் போன்றவை பற்றி மாமாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட வாட்டில், யூகலிப்டஸ் போன்ற வெளிநாட்டு மரங்களால் நம் மண்ணின் மரங்களுக்கும், மழைக்காடுகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சோலைக் காடுகள் அழிவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கேடு ஆகியவை குறித்துப் பதின்பருவத்தினர் தெரிந்து கொள்ள உதவும் நூல். வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய இந்நூல் 12-14 வயதினர்க்கானது.
வகை | சிறார் கதை |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 50/-. |