(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான கதை)
சின்னமனுர் என்கிற கிராமத்துல, குமரன் என்பவர் வாழ்ந்து வந்தாராம்.அவரு ஒரு வியாபாரி. .
அவரோட மிக பெரிய கனவு என்ன தெரியுமா? எல்லாரும் வீடு கட்டுற மாதிரி, நாம கட்டாம, புது மாதிரி ஒரு மரத்தால் ஆன வீடு கட்ட நினைச்சாரு.
ஆனால் அவரு ஒரு கஞ்சன். வீடு கட்ட மரம் வாங்க பணத்தை ஏன் செலவழிக்கணும்னு, யோசிச்சுகிட்டே இருந்தாரு.
அவரு ஒரு நாள் கடற்கரை பக்கம் போனாரு. அப்படிப் போகும் பொழுது அங்கு தூரத்தில் இருந்த மரங்களைப் பார்த்ததும் ஒரு யோசனை வந்தது.
இந்த மரத்தை வெட்டி, நாம் வீடு கட்டினால் என்ன என்று நினைச்சு கொண்டே, கடலில் கால்களை நனைச்சிட்டுப் போனாரு.
அவரு நினைச்சது கடலுக்குத் தெரிச்சிருச்சு. உடனே கடல் தன் அலைகள் மூலம் தன் மர நண்பனை அழைச்சிச்சு! “நண்பா! உனக்கு ஆபத்து!”.
“என்னாச்சு கடல் நண்பா? எப்பொழுதும் நீ சந்தோசமா இருப்பியே என்ன ஆச்சு உனக்கு?”
நீ குளிர்ந்த காற்றை விசுவதால் தான், நிறைய பேர் வெயில் இருந்து அவங்களப் பாதுகாத்துக்கவும், அப்புறம் குழந்தைகளா மாறி என்னோட விளையாடவும் எல்லாரும் வாராங்க! அது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஆனா! இன்னைக்கி ஒரு மனுஷன், என் மர நண்பனா! உன்னை வெட்டும் நோக்கில வந்துட்டான். அவனை ஒரு கை பார்க்கணும் நண்பா!”
“சரி! நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன்! அது மாதிரி, நீ பண்ணால் நான் என்னையும் காப்பாத்திக்குவேன். அந்த மனுஷனையும் ஒரு கை பார்த்து விடலாம்னு, மரம் சொல்லிச்சு.”
மறுநாள் காலையில் குமரன் மரம் வெட்ட தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மரத்தின் பக்கம் போனாரு. மரத்தின் அடிப்பாகத்தில் அதனை அறுக்க ரம்பம் வைச்சது தான்! அவ்வளவு தான்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கடல் கொந்தளிக்க ஆரம்பிச்சிடுச்சு. குமரன் ரொம்ப சத்தமா கேட்குதுனு திரும்பி பார்த்தா, கடல் ஆக்டோஷத்தோட அவனை நோக்கி ஓடி வந்துட்டு இருந்துச்சு.
அதைப் பார்த்ததும் குமரன் நாம் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி மறைந்து விட்டான்.
அன்பு கமல் சங்கர்,
கதைப் போட்டியில் பங்கேற்றமைக்கும், பிரசுரத்துக்குக் கதை தேர்வானதற்கும் பாராட்டுகள்! போட்டி விதிமுறைப்படி அல்லாமல் மிகவும் குறைவான வார்த்தைகளோடு இக்கதை இருந்தது. ஆனால் கதை சுவாரசியமாக இருந்தது. எனவே தான் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்தோம்.
தொடர்ச்சியாக வாசித்தும், எழுதியும் வந்தால், எழுத்து வசப்படும். வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ எங்கள் வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.
வாழ்த்துக்கள் கமல் சங்கர்,
ஒரு அருமையான குட்டி கதை, நல்ல படைப்பாற்றலும் கற்பனை திறனும் உள்ளது. தொடர்ந்து எழுங்கள்.
அன்புடன்
கண்மணி தமிழ்ச்செல்வி