மரம் மண்ணின் வரம்-23 – மகிழ மரம்

Mahiztree_pic

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதம் நாம் மகிழ மரம்  (Mimusops elengi) பற்றித் தெரிந்து கொள்வோமா?

இம்மரம் தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம். அடர்த்தியான கிளைகளுடன் எப்போதும் பசுமை மாறாமல் இருக்கும். இதன் லேசான மஞ்சள் கலந்த வெள்ளை நிற நட்சத்திர வடிவப் பூக்கள், அதிக வாசனை கொண்டவை. இப்பூக்களில் இருந்து, வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதற்கு புல்லட் மரம்! என்ற பெயரும் உண்டு. இதன் கடினமான தண்டுப் பகுதிக்காக, இப்பெயர் வைத்தார்களா? அல்லது சிவப்பு நிறத்தில், புல்லட் போல இருக்கும் இதன் பழத்துக்காக, வைத்தார்களா எனத் தெரியவில்லை.

நல்ல நிழல் கொடுப்பதாலும், பூக்கள் வாசனை மிகுந்தவை என்பதாலும், இம்மரம் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப் படுகின்றது. இதன் பட்டை, பூ, பழம் ஆகியவை மருத்துவக் குணங்கள் கொண்டவை. இதன் பழம் ஆரஞ்சு வன்ணத்தில் இருக்கும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலிலும், திருவெற்றியூர் தியாகராஜா சுவாமி கோவிலிலும், மகிழமரம் தல மரமாக உள்ளது.

அடுத்த மாதம் வேறொரு மரம் பற்றிய தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

படம்-நன்றி – இணையம்.

Share this: