இந்தக் கதையில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றிய மனித இனம், அங்கேயிருந்து கிளம்பி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த வரலாற்றைச் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்தாளர் உதயசங்கர் எளிமையாக விவரித்திருக்கிறார்.
மதியழகன், இளமுருகு என்ற சிறுவர்கள், ஒரு மலை மேல் ஏறுகிறார்கள். அப்போது காட்டுமிராண்டி போல் தோற்றமளித்த ஒருவன், அவர்களுக்குப் பின்னால் தோன்றுகிறான். “யார் நீ?” என்ற கேள்விக்கு “சேப்பியன்ஸ்” என்கிறான். அவன் இளமுருகைத் தொட்டவுடன், சிறுவர்கள் கண் முன்னே, ஆப்பிரிக்கா சவானா புல்வெளி தோன்றுகிறது.
65000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட சேப்பியன்ஸ், ஹோமோ எரக்டஸ்,நியாண்டர்தால், போன்ற மற்ற இனக்குழுக்களை எதிர்கொண்டதையும், அதற்குப் பிறகு படிப்படியாக அவர்களின் வாழ்வு வளர்ச்சி பெற்றதையும், ஆசிரியர் இந்நூலில் விவரித்திருக்கிறார்.
வழவழ தாளில் வண்ணப்படங்களுடன், மானுடப் பயண வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் நூல். தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ், இந்நூலை வெளியிட்டுள்ளது. இது 9-11 வயது சிறார்க்கானது.
வகை | சிறுவர் கதை (வரலாறு) |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 45/- |