மகி எழுதிய முதல் கதை

Mahimuthal_pic

ஷீபா, பூந்தமிழ், மகி, கபிலன், சபீதா ஆகிய ஐவரும், ஒரே வகுப்பு மாணவர்கள். இவர்கள் அரையாண்டு விடுமுறையில், மகி தாத்தாவின் கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கிருந்த ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றைக் கண்டு ரசிக்கிறார்கள்.

மைனா, தூக்கணாங்குருவி ஆகியவற்றைப் பற்றித் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். மகியின் பாட்டி கிராமத்துப் பலகாரங்கள் செய்து கொடுக்கிறார். விடுமுறை முடிந்து, ஊருக்குத் திரும்புகிறார்கள்.

பள்ளி திறந்தவுடன், கிராமத்தில் தான் பார்த்து வியந்த அதிசயங்களை, மகி கதையாக எழுதுகிறாள். வகுப்பு ஆசிரியரிடம், பாராட்டைப் பெறுகின்றாள். இயற்கையையும், கிராமத்து வாழ்வியலையும், ஆசிரியர் இக்கதையில் சிறுவர்க்கு அறிமுகம் செய்கிறார்.  

வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய இந்நூலைத் தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ், வெளியிட்டுள்ளது. இது 9-11 வயது சிறார்க்கானது.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்துரை.அறிவழகன்
வெளியீடுதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06
விலைரூ 25/-
Share this: