கருப்பசாமி என்ற சிறுவனுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இவனது கேள்விகளுக்குச் சின்னசாமி மாமா, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார்.
பணமே இல்லாத காலத்தில், புழங்கிய பண்டமாற்று முறை; இந்த முறையில் இருந்த சிக்கல்கள் என்னென்ன? சந்தை உருவான வரலாறு, பணத்தின் தேவை ஏன் ஏற்பட்டது? நாணயத்துக்குத் தங்கத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? காகிதப் பணம் புழக்கத்துக்கு வந்த கதை எனப் பணத்தின் வரலாற்றைச் சின்னசாமி மாமா, சிறுவனுக்குச் சொல்கிறார்.
இந்தியாவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகள் முதன்முதலில் எப்போது வெளியாகின? வெவ்வேறு நாட்டு கரன்சிகளுக்கான பெயர்கள் யாவை? போன்ற விபரங்களையும், ஆசிரியர் இதில் கொடுத்துள்ளார்.
பணத்தின் வரலாற்றைச் சிறுவர்கள் அறிந்து கொள்ள உதவும் நூல். வழவழ தாளில் வண்ணப்படங்களுடன், தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ், இந்நூலை வெளியிட்டுள்ளது. இது 12-14 வயது சிறார்க்கானது.
வகை | சிறுவர் கதை |
ஆசிரியர் | ச.தமிழ்ச்செல்வன் |
வெளியீடு | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 35/- |