கராத்தே ஆடு

Karateadu_book

மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை. 

எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும் என அதன் உரிமையாளர் சந்தைக்குக் கொண்டு வருகின்றார்.  அங்கு போலீஸ்காரர் ஒருவரையே ஆடு முட்டித் தள்ளிவிடுகின்றது.

போலீஸ்காரரையே முட்டித் தள்ளும் ஆட்டுக்கடா தனக்கு வேண்டும் என சின்னு, அதனை வாங்குகின்றான்.  கிம்கிம் கராத்தே மாஸ்டருக்குக் கடாவை அறிமுகம் செய்கின்றான்.  சின்னுவுடனும், கராத்தே மாஸ்டருடனும் சேர்ந்து, முட்டன் ஆட்டுக்கடா பல சாகசங்களைச் செய்கின்றது.  அது முட்டித் தள்ளியதால் திருந்தியவர்கள் பலர்.

மரக்கொள்ளையர்களையும் வீழ்த்திக் கிராமத்து மக்களின் அன்பைச் சம்பாதிக்கும் ஆட்டுக்கடா பற்றிய விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த கதை.

அவசியம் இந்நூலை வாங்கிச் சிறுவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.    

வகைமொழிபெயர்ப்பு சிறுவர் கதை
ஆசிரியர் – மலையாளம் தமிழாக்கம்பேராசிரியர் எஸ் சிவதாஸ் அம்பிகா நடராஜன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 8778073949
விலை₹ 30/-
Share this: