இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

Childday_pic

முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. பள்ளிகள்தோறும் குழந்தைகளுக்குப் பலவிதமான போட்டிகள் அறிவித்துப் பரிசு கொடுக்கிறார்கள். இனிப்பு வழங்கி மகிழ்விக்கிறார்கள்.

இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள். எனவே அவர்களை எந்த முறையில் நாம் வளர்க்கிறோமோ அதுவே நாளை நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே குழந்தைகளின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்களது உரிமைகளைக் காத்திட வேண்டும்.

இந்தாண்டு முதல் குழந்தைகள் தினத்தில் புத்தகங்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். வீட்டுக்கொரு நூலகம் ஏற்படுத்துங்கள். நாளைய சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக மலர, இன்றே இப்போதே புத்தக வாசிப்பு தொடங்கவேண்டும். உங்கள் குழந்தைகள் பன்முகத் திறமையுடன் திகழப் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: