ஹேமபிரபா சென்னையில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்துப் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகளையும், மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருக்கின்றார். ‘இது தான் வைரல்;அறிவியல் பார்வையில் கரோனா’ எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். குழந்தைகள் அறிவியல் இதழான துளிர் இதழ்களில் ஆய்வாளர் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் குறித்து, இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘ஹம்போல்ட் –அவர் நேசித்த இயற்கை’ என்ற தலைப்பில், மின்னூலாக அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது.