ஹரிவர்ஷ்னி ராஜேஷ்

Harivarshini_pic

ஹரிவர்ஷ்னி ராஜேஷ் கோயம்புத்தூர் தொண்டாம்புத்தூர் புளியம்பாளையம் ஊரில் வசிக்கிறார்.  9 வயதான இவர் நான்காம் வகுப்பு மாணவி.  இவர் தம் 9 வது பிறந்த நாளில், ஒன்பது கதைப் புத்தகங்கள் வெளியிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். 

குகைக்குள் பூதம், காட்டுக்குள் திருவிழா, குக்கூ குக்கூ தவளை, நிசாசினியின் மீன் பொம்மை என்பவை இவர் எழுதிய சில புத்தகங்கள்.

இவர் சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் கதைப்பயிற்சியில் உற்சாகமாய்க் கலந்து கொண்டு கதைகள் படைப்பதில் வல்லவர்.

கதையெழுத வயது முக்கியமில்லை; எந்த வயதிலும் எழுத்தாளர் ஆகலாம் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இவர் தமக்கை வர்த்தினி ராஜேஷ் இவர் எழுதிய கதைகளுக்கு அற்புதமாக ஓவியம் வரைந்திருக்கிறார்.  இவர்களது பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள்.

இவர் புத்தகங்கள் கிடைக்குமிடம்:- லாலிபாப் சிறுவர் உலகம்,சென்னை.  போன் எண். (+91 98412 36965)

Share this: