சுட்டிக்கதைகள் – சிறுவர் கதைகள்

Chutti_Kathaikal_pic

இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன.  நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள் இதில் உள்ளன.

பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், தாய் சொல்லைத் தட்டக்கூடாது  போன்ற அறநெறி கருத்துகளைக் கொண்ட கதைகளுடன்   எலி வடை சுட்ட கதை,சிப்ஸ் தின்னும் காக்கா போன்ற குழந்தைகளை மகிழ்விக்கும் சில கதைகளும், இதில் உள்ளன.

வழவழப்பு தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்பு. மொழிநடை மட்டும் சற்றுக் கடினம்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்நீலாவதி
வெளியீடு-சுருதிலயம், சென்னை-88. செல் 9444124285
விலைரூ125/-
Share this: