சுட்டி எழுத்து (செப்டம்பர் 2021)

cover photo for chutti writing sep 21

கதை – மித்ரன் – 5 வயது.

ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு மரத்துல வீடு கட்டுச்சி.  ரெயின்போ (Rainbow) கலர்ல வீடு கட்டுச்சு.  கதவு வைக்க ஒரு இலை பறிக்கப் போச்சு.  அப்ப ஒரு கொசு வந்துச்சி.  உள்ளே நிறைய படுக்கை இருந்துச்சி. அதுல ஒரு படுக்கை பச்சை கலர்ல இருந்துச்சி.  கொசு அதுல போயி படுத்துக்கிச்சி. 

வண்ணத்துப்பூச்சி வந்தவுடனே, கொசு “இது என் வூடு”ன்னு சொன்னுச்சி.  அப்ப லேடி பேர்டு (Lady Bird) வந்து, கொசுக்கிட்ட சண்டை போட்டுச்சி.  கொசு தன் கூரான மூக்கால லேடி பேர்டு முதுகில குத்திடுச்சி.  அது அழுதுக்கிட்டே போயி, ஒரு மரத்துல ஒட்காந்துக்கிச்சி. 

அப்புறம்  வண்ணத்துப் பூச்சியோட அம்மா வந்து, கொசுக்கிட்ட சண்டை போட்டுச்சி.  அப்புறம் கொசு வெளியில வந்துடுச்சி. அப்புறம் எல்லாரும் உள்ளாற போயி படுத்துக்கிட்டாங்க.  கொசுவும் உள்ளாற போயி படுத்துக்கிச்சி.

Share this:

One thought on “சுட்டி எழுத்து (செப்டம்பர் 2021)

Comments are closed.