சிறுவர்க்கான கதைப் போட்டி

shortstory_contest

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது.  அவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறுவர்க்கான கதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம். 

சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்காற்றி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜாஅவர்கள் நடத்தும் ‘லாலிபாப் உலக’த்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளோம்.  கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’என்ற காணொளியைத் துவங்கிக் குழந்தைகளுக்குக் கதை எழுத சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார். 

இவரிடம் பயிற்சி பெற்ற ஹரிவர்த்தினி ராஜேஷ் என்ற நான்காம் வகுப்பு மாணவி, அண்மையில் தம் 9 வது பிறந்த நாளில், 9 கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  அவருக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்! சுட்டி உலகத்தில் அவருடைய ‘குகைக்குள் பூதம்’ என்ற புத்தக அறிமுகமும் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வாழ்த்துகிறோம் !  வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து வசப்படும் என்பதால், பரிசுத் தொகையில் பாதி புத்தகமாகக் கொடுக்கப்படும்.

  • 7 முதல் 15 வரையிலான குழந்தைகள் யார் வேண்டுமானாலும், இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
  • கதைகளைத் தமிழில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
  • ஒருவர் எத்தனைக் கதைகள் வேண்டுமானாலும் எழுதியனுப்பலாம்.
  • கதைகளை வேர்ட் டாகுமெண்டில் (Word Document) தட்டச்சு செய்து அனுப்பவும்.
  • உங்கள் படைப்புகளை team@chuttiulagam.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களையும் team@chuttiulagam.com என்ற முகவரியில் கேட்கவும்.

படைப்புகள் அனுப்ப இறுதி நாள்:- 31/10/2021.

Share this: