யானை

yaanai book cover

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் பார்த்துக் கொள்ள, மருத்துவர் அறிவுறுத்துகிறார்..  

மற்ற உயிர்களைத் தங்களுக்கிணையாக நேசிக்கும் குணம், குழந்தைகளுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.  ஐந்தறிவு, ஆறறிவு என்ற பேதமெல்லாம், அவர்கள் பார்வையில் இல்லை. நிஜ யானையை வீட்டுக்குக் கொண்டு வர முடியுமா?  அது சாத்தியமா? என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. அதுவும் நோயுற்றிருக்கும் போது, குழந்தை அடம் பிடிப்பது இயல்பு.   

அவளுடைய கடைசி ஆசையை, எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என அவள் தந்தை, வெளியில் செல்கிறார்.  அவர் உயிருள்ள யானையைக் கொண்டு வந்தாரா?  நாதியா குணமடைந்தாளா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்.  குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.

குழந்தையின் மனப்போக்கை அருமையாகச் சித்தரித்து, வாசிக்கும் வாண்டுகளை மகிழ்வூட்டும் கதை.

வகைசிறுவர் சிறுகதை (மொழியாக்கம்)
ஆசிரியர்அலெக்ஸாண்டர் குப்ரின்
தமிழாக்கம்:- சாலை செல்வம்
வெளியீடுகுட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர். (9843472092 /9605417123)
விலைரூ 75/-
யானை
Share this: