இத்தொகுப்பில் கருப்பு வெள்ளை நிழற்படங்களோடு கூடிய, 9 கதைகள் உள்ளன. சிங்கம் வாழும் இடத்துக்குப் பெயர் என்ன? ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு, எத்தனை கிலோ உணவு சாப்பிடும்? நரி ஏன் வேட்டையாடுவது இல்லை? அழிவின் விளிம்பில் இருக்கும் தவளை இனங்கள், எவையெவை? அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற, என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பொது அறிவுச் செய்திகளைக் இக்கதைகள் வாயிலாகச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார், ஆசிரியர்.
பொது அறிவு வளர்வதற்கு மட்டுமின்றி, புவியில் மனிதவுயிர் நிலைத்திருக்க, இயற்கையையும், காட்டுயிர்களையும் பேணிக் காத்திட வேண்டும் என்ற இக்காலத்துக்கு, மிகவும் அவசியமான கருத்தைச் சிறுவர் மனதில் நன்கு பதிய வைக்கவும், இந்நூல் வாசிப்பு உதவும்.
இயற்கை & காட்டுயிர் குறித்த, பொது அறிவுக் கதைகள்.
வகை | சிறுவர்களுக்கான பொது அறிவுக்கதை |
ஆசிரியர் | கன்னிக்கோவில் ராஜா |
வெளியீடு | வாசகசாலை, சென்னை |
விலை | ரூ 85/- |