ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த போது, மழை நாட்களில், வழியில் ஒதுங்க கூட இடமின்றி, நனைந்து சிரமப்பட்ட காலத்தில், தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்தில் போவதைப் பார்த்து, “நம் பள்ளிக்கும், இது போல் பேருந்து வாங்க வேண்டும்,” என்று மாணவர்கள், தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம். அந்த ஆசை, கனவு தான், இக்கதையின் மையம், என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
கிராமப்புறப் பள்ளியான தணிகை அரசுப்பள்ளியில், இலவசக் கல்வி, இலவச உணவு அளித்தும், அங்கிருந்த விக்டோரியா ஆங்கிலப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவே, பெற்றோர் விரும்புகின்றனர். மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர், கிராமங்களுக்குச் சென்று, பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புமாறு கேட்கின்றார். பேருந்து இருந்தால், அனுப்புவதாக அவர்கள் சொல்லவே, பேருந்தை வாங்குவதற்கான முயற்சிகளில், அவர் ஈடுபடுகின்றார்.
இதன் காரணமாகத் தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு, போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும், விறுவிறுப்பாகவும், விவரித்திருக்கின்றார், ஆசிரியர்.
சுவாரசியமான சிறுவர் நாவல்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) |
வெளியீடு | தேசாந்திரி பதிப்பகம், சென்னை. (+91-44-23644947) |
விலை | ரூ 70/- |