ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன. புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் பாம்பிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது, எலிகளின் எண்ணம் டோமும் இங்கிலாந்து சென்று படித்து, பாஸ்வேர்டு போட்டுத் திறக்கும்படியான டிஜிட்டல் கதவை உருவாக்குகின்றது.
இதை முறியடிக்க ராக் என்ற பாம்பு குட்டியும், நியூயார்க் சென்று படிக்கிறது. அது திரும்பி வந்து, எலிகளின் டிஜிட்டல் கதவைத் திறந்ததா?. பாம்புக்கும், எலிக்குமான தலைமுறை பகை என்னவாயிற்று? என்பதை அறிந்து கொள்ள சிறுவர்க்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
விலங்குகளும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால், என்னவாகும் என்ற விநோதமான கற்பனையே கதை.
புதுமையும், சுவாரசியமும் நிறைந்த இளையோர் நாவல்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) |
வெளியீடு | தேசாந்திரி பதிப்பகம், சென்னை. 044-23644947 |
விலை | ரூ 35/- |