ஸ்நோ பாப்பா எனும் சிறுமி ஆற்றுக்குள் விழுந்து, ஆறு போன திசைகளில் பயணித்துக் கடலுக்குச் சென்று, அங்கே அற்புதமும், அதிசயங்களும் நிறைந்த உலகைக் காண்கிறாள்.
ஒற்றைக் கண்ணும், மான் தலையும் கொண்ட மீனின் கண்ணாடி மாளிகையில், விதவிதமான மீன்கள் சீட்டாடுகின்றன. அப்போது ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு பதட்டமாக,வருகிறது, ஜியோகிலானி ஆமை. அது என்ன செய்தி? தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்,
கடலிலேயே மிகச் சிறந்த மருத்துவர் கடல் பசு ஆவுளியா, அழகும் ஆபத்தும் கொண்ட காளான் தோட்டம், பாப்பாவைத் தூக்கிக் கொண்டு, அன்னப்பறவை போல் நீந்தும் ஜெல்லி மீன், முயல் கூடு தீவில் வசிக்கும் துறவி நண்டு, பறக்கும் மின்மினி தீவைக் காவல் காக்கும் நீலநிற சுறா மீன், அத்தீவில் வசிக்கும் வீர தீரமிக்க ஆந்தைகள் எனப் பல அதிசயங்களைக் கண்டு வியக்கிறாள், ஸ்நோ பாப்பா.
கடலில் கொட்டப்படும் நெகிழியின் விளைவாக, கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தையும், இக்கதை வழியாகக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.
அதீத கற்பனையும், அதிசயங்களும் நிறைந்த, எட்டு வயது குழந்தைகளுக்கான நாவலிது.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | விட்டில் |
வெளியீடு | அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர். |
விலை | ரூ 90/- |