49வது புத்தகத்திருவிழா இன்று சென்னையில் இனிதே துவங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விழாவைத் துவக்கி வைத்தார்.
சென்னை நந்தனம் YMCA உடல்கல்வியியல் கல்லூரியில் ஜனவரி 19 வரை இவ்விழா நடைபெறும். இது ஆசியாவின் மிகப் பெரிய அறிவுத் திருவிழா! இந்த முறை நுழைவுக்கட்டணம் இல்லை. வாசகர்கள் இலவசமாகவே சென்று வரலாம்.
இவ்விழாவுக்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்குச் சென்று வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்கள் விரும்பும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.
