Magic Umbrella (Children Novel)

Magicumbrella_pic

“A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that magic, the author interestingly makes the children learn the secrets and nature of living beings in the forest. ‘Magic Umbrella’ is written in a fictional language that arouses curiosity in children. It will surely fascinate them. No doubt, it will be one the great juvenile fictional novels.” (Writer – Udhayasankar)

ஒரு மழை நாளில் பறக்கும் சக்தியுள்ள மந்திரக்குடை ஒன்று, தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் குடையைப் பிடித்துக் கொண்டு வானத்தில் மகிழ்ச்சியாகப் பறக்கிறாள். கை தவறிக் கீழே விழுந்து விட்டால், குடையைக் கூப்பிடுவதற்கான மந்திரத்தை, அது சொல்லித் தருகிறது. ஆனால் தேவி மந்திரத்தைச் சரியாகக் காதில் வாங்காமல் அலட்சியமாக இருந்து விடுகிறாள்.  

உற்சாகமாய்ப் பறக்கும் தேவி, ஒரே ஒரு தும்மலில் பிடி நழுவிக் கீழே விழுகிறாள். பதற்றத்தில் மந்திரத்தை மறந்துவிடுகிறாள். அவள் விழுந்த இடம் வன விலங்குகள் வாழும் அடர்ந்த காடு. அங்கே தேவி இரவை எப்படிக் கழிக்கிறாள்? காட்டைப் பற்றி என்னென்ன புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாள் என்பதை, இந்நாவல் சுவாரசியமாக விளக்குகிறது.

மந்திரம் மீண்டும் தேவிக்கு நினைவுக்கு வந்ததா?  அவள் வீடு திரும்பினாளா? என்று அறிந்துகொள்ள, இக்கதையை வாசியுங்கள். 6-12 வயதினர்க்கான நாவல்.  

வகை –சிறார் நாவல் – ஆங்கில மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: தமிழில் :-
ஆங்கிலத்தில்:-
ஞா.கலையரசி
N.கலாவதி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம் சென்னை-18  044-24332924
விலைரூ 40/-

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *