குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக, இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் மீது அளவற்ற நேசம் வைத்திருந்தவர் நேரு. அவரைக் குழந்தைகள் “நேரு மாமா” என்று அழைத்து மகிழ்ந்தனர்.
“இன்றைய குழந்தைகளே, நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறவர்கள்; நாம் அவர்களை எந்த முறையில் வளர்க்கிறோமோ, அந்த வளர்ப்பு முறையே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்; நாளைய குடிமக்கள்; அவர்கள் தோட்டத்திலுள்ள மலர் அரும்புகள் போன்றவர்கள்; எனவே அவர்களைக் கவனமாகவும், அன்பாகவும் பராமரித்து வளர்க்க வேண்டும்” என்றார் நேரு.
எல்லாக் குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலம் உருவாக, அனைவரும் கூடி உழைத்திடுவோம்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.