பாரிஸ் ஒலிம்பிக்ஸ்-2024-சின்னம்

Phryges_pic

பிரான்சின் தலைநகர் பாரிஸில், 26/07/2024 முதல் 11/09/2024 வரை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், 206 நாடுகளின் 10714 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிரான்சின் ஒவ்வொரு டவுன் ஹாலின் மேலும் அமைந்துள்ள அன்ன மேரி சிலையின் தலையில், இந்த ஃபிரிஜ்யன் தொப்பியிருக்கும். பிரான்சின் நாணயம்,தபால் தலைகள் ஆகியவற்றில் இவை இடம்பெற்றுள்ளன. வடக்கு மற்றும் தென்னமெரிக்கச் சின்னங்களில் ரோமானியர் காலத்தில் விடுவிக்கப்பட்ட அடிமைகள், இந்தத் தொப்பிகளை அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலை, சுதந்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் விதத்தில் பிரான்சின் பாரம்பரியமிக்க ஃபிரிஜியன் தொப்பிகள் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024இன் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.  

இந்தியா சார்பில் இப்போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, மக்கள் தொகையில் அதிகமுள்ள இந்தியா பெறும் பதக்கங்கள் மிகக் குறைவு! நம் நாட்டில் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் விளம்பரமும், ஆதரவும் மற்ற தனிநபர் விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. விளையாட்டுத் துறையில் அரசியல்வாதிகளின் தலையீடும் மிக அதிகம். இந்தக் குறைகளை நீக்கித் திறமையான விளையாட்டு வீரர்களை அரசு இனங்கண்டு உதவித் தொகையுடன் சிறப்பான பயிற்சியும் கொடுத்தால், சீனா போன்று இந்திய வீரர்களூம் உலக அரங்கில் ஜொலிப்பது நிச்சயம்!  

சுட்டி உலகம்.

(Pc-Thanks_Wikipedia)

Share this: