காடன், வேடன் என்பவை இரண்டு கிளிகள். இரண்டும் லிமோ என்ற வாய் பேசமுடியாத சிறுவன் குடிசையில் வாழ்கின்றன. காட்டில் விதையொன்றை அவன் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட எங்கெங்கோ பயணிக்கிறது.
300 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன டோடோ பறவை, ஒரே இலையுள்ள கேப் துலிப் செடி, 2000 ஆண்டு வரை வாழும் தாவரம் வெல்வெட்சியா, உலகின் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி குயின் அலெசாண்டிரா எனச் சிறுவர்கள் இயற்கையைப் பற்றியும், காட்டுயிர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை செய்திகள், இந்நாவலில் ஏராளம்.
உண்மையும், புனைவும் கலந்த சிறுவர் நாவல்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | பூவிதழ் உமேஷ் |
வெளியீடு | வாசக சாலை, சென்னை. (+91-9942633833 & +91-9790443979) |
விலை | ரூ 60/- |