மரம் மண்ணின் வரம்-22 – பூவரசு

Poovarasu_pic

இதற்குக் கல்லால் பூப்பருத்தி, பம்பரக்காய் போன்ற, வேறு பெயர்களும் உண்டு.  ஆங்கிலத்தில் இதனை போர்ஷியா மரம் (Portia tree)என்றும், இந்திய டியூலிப் மரம் (Indian tulip tree)என்றும் அழைக்கின்றார்கள்.

எல்லா நாட்களிலும் அடர்த்தியான கிளைகளுடன், பசுமையாகக் காட்சியளிக்கும். இதன் பூ மஞ்சள் நிறத்தில், குடை போன்று, அழகாக இருக்கும். சங்க காலத்தில் கபிலர் சொன்ன 99 பூக்களில் இதுவும் ஒன்று.

தமிழ்நாட்டில் எங்கும் இம்மரம் பரவலாகக் காணப்படுகின்றது. இதனை நம் முன்னோர் நாட்டுத் தேக்கு என்று, அழைத்தனர். ஏனெனில் தேக்கு போல, அவ்வளவு உறுதியான மரம் இது. தேக்கு மரத்தின் விலை மிக அதிகம். அதனை ஏழைகள் வாங்க முடியாது. எனவே தேக்கு மரம் போல உறுதியான கடினத் தன்மையைக் கொண்ட இம்மரத்தினை, ‘ஏழைகளின் தேக்கு’ என்றனர்.

வீட்டுச் சன்னல், கதவு, வாசல் நிலை, மேசை, நாற்காலி போன்றவற்றைச் செய்ய, இம்மரம் பயன்படுகின்றது. நம் தாள வாத்தியமான தவில் செய்யவும், இம்மரம் உதவுகின்றது. பழங்காலத்தில் ஏர் கலப்பை செய்யவும், இம்மரம் பயன்பட்டதாம். பல மருத்துவக் குணங்களும், இம்மரத்துக்கு உண்டு.

அடுத்த மாதம், வேறொரு மரம் பற்றித் தெரிந்து கொள்வோமா?

(Thanks to Wikipedia for Poovarasu Pic)

Share this: