பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அரசுடன் கை கோர்த்து, 21/07/2023இல், வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுப் பிள்ளைகள், வாசிக்கக் கூடிய சிறு புத்தகங்களை உருவாக்குவது, வாசிப்பு இயக்கத்தின் நோக்கம். படங்கள், சிறு வாக்கியம், எளிய மொழி- இவை வாசிப்பின், முக்கிய மைல் கற்கள். முதல் கட்டமாக, 53 சின்னஞ்சிறு கதைப் புத்தகங்களைத் தமிழ்நாடு அரசு அச்சிட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் முன்னெடுத்த வாசிப்பு இயக்கம் ,யாருக்காக, எதற்காகத் தொடங்கப்பட்டது? இதன் நோக்கம், தேவை, இயக்கம் ஆக்குதலின் அவசியம் ஆகியவை குறித்துப் புரிதலை ஏற்படுத்த, “வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக?” என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கியுள்ளது. இதனைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது
இது வாசிப்பு இயக்கத்தில் இதுவரையிலான கள அனுபவங்கள், பரிசோதனை முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூல். இந்தியாவில் இதுவரை இல்லாத முயற்சியாகத் தமிழக அரசு முன்னெடுத்துள்ள வாசிப்பு இயக்கத்தின் பின்னணி பற்றிய நிகழ்கால வரலாற்றை, இந்நூல் பேசுகிறது.
இந்நூல் இன்று வெளியாவதில் மகிழ்ச்சி!