இவர் 30 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 40 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
‘நேரம் நல்ல நேரம்’, ‘வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை’, ‘கிண்டி வந்தாச்சா?’, ‘குழந்தைக்குத் தினமும் ஒரு பைபிள் கதை’ ஆகிய சிறுவர் சிறுகதை நூல்களையும், ‘நம்பிக்கை இல்லம்’, ‘சூப்பர் சிவா’ என்ற சிறுவர் நாவல்களையும், ‘தங்கச்சிப் பாப்பா’ என்ற சிறுவர் பாடல் நூலையும், ‘சமத்துவபுரம்’ என்ற சிறுவர் நாடக நூலையும், வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்ப்பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகளை, ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
‘சிண்ட்ரெல்லா’, ‘அற்புத உலகில் ஆலிஸ்’, ‘டாம்சாயரின் சாகசங்கள்’, ‘கருணைத்தீவு’, ‘கிரீன் கேபிள்ச் ஆனி’, ‘குட்டி இளவரசி’ ஆகியவை, தினமணியின் சிறுவர்மணியில், தொடர்களாக வெளிவந்தன. ‘ஹெய்தி’, ‘இரகசிய தோட்டம்’, ‘புதையல் தீவு’ ஆகிய சிறுவர் நாவல்களும், ‘மந்திர உலக்கை’, ‘மாய மோதிரம்’, ‘தவளை இளவரசி’, ‘பறக்கும் இளவரசன்’ ஆகிய நாடோடிக் கதைகளும், நூல்களாக வெளிவந்துள்ளன.
‘தமிழ்க் குழந்தை இலக்கியம் – இன்றும் இனியும்’ என்ற தலைப்பில், சிறார் இலக்கியம் குறித்தான கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு உதயமான ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.