இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை; அவர் செய்யும் செயலே முக்கியம், போன்ற கருத்துக்களைக் கதைகளின் வழியே, சிறுவர்களின் மனதில் பதியுமாறு ஆசிரியர் சொல்லியுள்ளார்.
‘தன்னம்பிக்’கையில்’ தொங்கிய மல்லிகை’ சிறப்பான கதை. வறுமையான நிலையிலும் பிறரிடம் இரந்துண்ணாது, தன் உழைப்பின் மூலம் குடும்பத்தின் கண்ணியம் காக்கும் பொறுப்பான சிறுவனின் கதை.
9 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்கக் கூடிய கதைகள்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | இரா.மேகலா |
வெளியீடு:- | லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18. செல் 88257 69056 |
விலை:- | ரூ 90/- |