யாருக்குத் தைக்கத் தெரியும்? (சிறார் கதைகள்)

Yarukku_Thaika_pic

குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன.  முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய்.  குழந்தை மனம் பேயைக் கூட நல்லதாகவும், தன்னுடன் விளையாடுவதாகவும் கற்பனை செய்கிறது! அம்மா பயந்து அதைத் துரத்தினாலும், மீனா கனவில் அதனுடன் விளையாடுவதாக ஆசிரியர் செய்திருக்கும் கற்பனை சிறப்பு!  யாழினி வீட்டில் உள்ள மேக்கப் ஐயிட்டம் எல்லாம் பேசுகிறது!

பூக்களுக்கு எப்படி நிறம் வந்தது? என்பதைச் சொல்லும் ‘பூக்களின் நகரம்’ கதை மிகவும் அருமை!  ‘நிறம் என்பது ஒளியின் விளையாட்டு’ என நிறத்துக்கான புது விளக்கம் மிக அருமை.  “‘பூக்களின் நகரம் கதையில் ரமணியின் கற்பனை உச்சத்திற்குப் போயிருக்கிறது” என்று எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், வாழ்த்துரையில் தெரிவித்திருப்பது மிகவும் சரி.     

பருந்து ராஜாவின் உடையைத் தைப்பதற்காகக் கிளி, மைனா, காக்கா, குயில், ரெட்டைவால் குருவி. தேன்சிட்டு, தையல்சிட்டு என நிறைய பறவைகள் முயலுகின்றன.  இத்தனை பறவைகளின் பெயர்களைக் குழந்தை ரமணி தெரிந்து வைத்திருக்கிறார் என்பது மிக வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடைசியாக ராஜாவின் உடையை எந்தப் பறவை  தைத்துக் கொடுத்தது? அதற்கு பருந்து ராஜா என்ன பரிசு கொடுத்தார்? என்பதைக் கதைப் புத்தகத்தை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

வண்ணப்படங்கள் நிறைந்து, தரமான தாளில் அச்சடிக்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். குழந்தை கதாசிரியர் ரமணிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்குழந்தை கதாசிரியர் ரமணி
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை-89 (+91) 91765 49991
விலை₹ 70/-
Share this: