ஹரிவர்ஷ்னி ராஜேஷ் கோயம்புத்தூர் தொண்டாம்புத்தூர் புளியம்பாளையம் ஊரில் வசிக்கிறார். 9 வயதான இவர் நான்காம் வகுப்பு மாணவி. இவர் தம் 9 வது பிறந்த நாளில், ஒன்பது கதைப் புத்தகங்கள் வெளியிட்டுச்
[...]
இந்நூலின் ஆசிரியரான கன்னிக்கோவில் இராஜா, சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்து, குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வருகிறார். இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன.
[...]