இயற்கையின் விலை என்ன?

Iyarkkaiyinvilai_pic

(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை)

அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார்.

இவர் பெயர் சீயால். சுகுவாமிஷ், துவாமிஷ் ஆகிய இனக்குழுக்களின் தலைவராக இவர் இருந்தார்.  இவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை ஆங்கிலேய அரசு வாங்க விரும்பிய போது, சியாட்டில் கூறிய பதில், உலகப் புகழ் பெற்றது. 

“வானத்தை வாங்க முடியுமா? மழையையும், காற்றையும் விலை பேச முடியுமா?” என்ற கேள்விகளுடன், அவர் உரை துவங்கியது.  “இயற்கையைச் சார்ந்து தான் வாழ வேண்டுமேயொழிய, இயற்கைக்கு எதிராக வாழ்வது, மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்வது போலத்தான்”

“புதிதாகப் பிறந்த குழந்தை , எப்படித் தாயின் இதயத்துடிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறதோ, அது போல் நாங்கள் இந்தப் பூமியை விரும்புகிறோம்”

என்று இவர் நிகழ்த்திய உரையின் சாரம், இச்சிறு நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை, நாம் சந்திக்கும் இக்காலத்தில், இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.    

வகைசூழலியல் கட்டுரை
ஆசிரியர்ஆதி வள்ளியப்பன்
வெளியீடுகாக்கைக் கூடு,சென்னை-4 +91 90436 05144
விலைரூ 20/-
Share this: