வெயில் காலம் மழைக்காலம்

வெயில்காலம்_படம்

ஹைதருக்கு அலைசா, சோரா என்று இரண்டு பெண் குழந்தைகள். பாசமான குடும்பம். சகோதரிகள் இருவரும் ஒரு நிமிடம் கூட ஒருவரை விட்டு இன்னொருவர் பிரிய மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டையே வந்தது இல்லை.

திருமண வயது வந்தவுடன் பெற்றோர் அலைசாவுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். மாப்பிள்ளை விவசாயி. அடுத்துச் சோராவுக்குத் திருமணமாகிறது. மாப்பிள்ளை பானை வியாபாரம். அலைசா குடும்பத்துக்கு வேளாண்மை செய்ய மழை வேண்டும். சோரா குடும்பத்துக்கு மண் பானை காய வெயில் வேண்டும்.

அதற்குப் பிறகு என்ன ஆனது? சிறு வயதில் சண்டையே போடாத பாசமான சகோதரிகள் சண்டை போட்டார்களா? என்று தெரிந்து கொள்ள இக்கதையை வாசியுங்கள். ஆசிரியர் லைலா தேவி துருக்கி நாட்டுப்புறக் கதையை எளிய மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

வகைசிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்லைலா தேவி
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்+புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18.
விலைரூ 20/-.
Share this: