துணிச்சல்காரி

thunichalkari_pic

“ஒவ்வொரு குழந்தையும் எவ்வித வன்முறையும் இல்லாத மகிழ்ச்சியான உலகில், ஒரு சிறு பறவையைப் போல் பறந்து திரிந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் களிக்க வேண்டும் என்பதே என் பெருங்கனவு” என்று இந்நாவலின் முன்னுரையில் கூறியிருக்கிறார் ஆசிரியர்.

கூட்டம் நிறைந்த பேருந்தில் நெருக்கமாக நின்று கொண்டு பயணம் செய்வது பெண்களுக்குக் கொடுமையான அனுபவம். அந்த இக்கட்டான  சமயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இளம் வயது பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் உரசுவது வக்கிரப் புத்தி கொண்ட ஆண்கள் சிலரின் பழக்கம்.

பெண் குழந்தைகள் போலவே ஆண் குழந்தைகளும் பாலியல் தொந்திரவால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை ஜோபின் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். எளிதில் யாரையும் நம்பி ஏமாந்து விடும் அப்பாவி கதாபாத்திரம் மதுமிதா. தெரியாதவர்களோ, முன் பின் பழக்கமில்லாதவர்களோ ஏதாவது தின்பண்டம் கொடுத்தால் வாங்கித் தின்னக் கூடாது; அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை இந்த மதுமிதா கதாபாத்திரம் மூலம் இந்நாவலை வாசிக்கும் சிறாரை எச்சரிக்கிறார் ஆசிரியர்.

இந்நாவலின் கடைசி அத்தியாயமும் பேருந்துப் பயணத்தில் தான் முடிகிறது. நிலா தன் இடுப்பைக் கிள்ளிய ஒருவனை ஓங்கி அறைந்ததோடு காலால் ஓர் உதையும் விடுகிறாள். கராத்தே கற்ற அவளது உதையால் அவன் சுருண்டு பேருந்திலிருந்து வெளியே போய் விழுகிறான். அவள் ஆசிரியரும், பேருந்தில் இருந்தவர்களும் அவள் தைரியத்தைப் பாராட்டுகின்றனர்.

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்ஈரோடு சர்மிளா
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 80/-.
Share this: