சொல்லப்படாத உலக அதிசயங்கள்

Sollapadatha_pic

மானசி ரஷ்யாவில் வாழும் தமிழ்ச்சிறுமி. அவள் தன் நண்பர்களுடன் இணைந்து, கணினியில் ‘இயற்கை அதிசயங்கள்’ என்ற செயலியை உருவாக்குகிறாள். அவர்களுக்கு வித்தியாசமான உலக இயற்கை அதிசயங்களைத் தேடிப் பார்த்து, ரசிப்பதில் ஆர்வம் அதிகம்.

ஒரு நாள் இவர்கள் இணைந்து இணையச் சந்திப்பு மூலம், இயற்கை அதிசயங்களைக் காண ஏற்பாடு செய்கிறார்கள். ஆசிரியர் வளர்மதி தொடக்க உரை ஆற்றுகிறார். மானசி இணையம் வழியே ரஷ்யாவின் பைகால் ஏரியைக் காட்டி, அதன் சிறப்புகளை விளக்குகிறாள். சீனாவின் வானவில் மலைகளைக் காட்டுகிறான் லியாங்.

நைஜீரியாவின் செரெங்கெட்டி சமவெளியில், ஆயிரக்கணக்கான விலங்குகள் உணவுக்காக இடம்பெயர்வது பற்றிச் சொல்கிறான் சிபிகே. ஆலிவர் கலிபோர்னியாவில் நகரும் கற்கள் பற்றிச் சொல்கிறான்.இப்படி இணையத்தின் வழியே, சிறுவர்கள் இயற்கையின் அழகைக் கண்டு ரசிக்கிறார்கள். அதன் அதிசயங்களைத் தெரிந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இளந்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ்த் தமிழ்நாடு பாடநூல் கழகம் இதனை வெளியிட்டுள்ளது. வழ வழ தாளில் வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகம். கேள்விப்படாத இயற்கை அதிசயங்கள் சிலவற்றைப் படங்களுடன் தெரிந்து கொள்ள உதவும் நூல். 12-14 வயதினர்க்கானது.

வகைசிறுவர் கட்டுரை நூல்
ஆசிரியர்கள்கொ.மா.கோ.இளங்கோ & வித்யா இளங்கோ
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06
விலை:-ரூ 25/-
Share this: