பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.
குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இதில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு குறுங்கதைகள் உள்ளன.
சிவி என்ற ஒட்டகச்சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின், சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
வகை – சிறார் வாசிப்பு நூல் | சிறுவர் கதை |
ஆசிரியர் | பூர்ணிமா கார்த்திக் |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/- |