சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

Santhanayakam_pic

இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4 நிமிட அனிமேஷன் குறும்படமாக அந்நிறுவனம் தயாரித்தது. அந்தக் கதையைச் ‘சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?’ என்ற தலைப்பில், நர்மதா தேவி தமிழில் படக்கதையாக மொழிபெயர்த்து இருக்கிறார்.

ஒரு பன்றிக் குடும்பத்தில் ஆண் பன்றிக்குட்டிகள் மரத்தில் ஏறிப் பழம் பறித்தல், கோழி பிடிக்க வரும் காட்டு விலங்குகளைத் துரத்துதல், சந்தைக்குப் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற வெளி வேலைகளைச் செய்கின்றன. பெண் குட்டிகள் வீடு கூட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டு வேலைகளைச் செய்கின்றன.  

ஊரிலிருந்து சாந்தநாயகம் என்ற பன்றிக்குட்டி, இவர்கள் வீட்டுக்கு வருகின்றது. அது மரத்தில் ஏறிப் பழம் பறிக்கிறது; வீடும் கூட்டுகிறது. இப்படி ஆண் வேலை, பெண் வேலை என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா வேலைகளையும் செய்கிறது. அது ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம், மற்ற பன்றிக்குட்டிகளுக்கு வருகின்றது. எல்லாம் சேர்ந்து குளிக்கும் போது, உண்மையைக் கண்டுபிடிக்கின்றன.

வகைசிறுவர் கதை (மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் – கதை உரிமை   தமிழாக்கம்:-Camera-etc, தன்னார்வ நிறுவனம், பெல்ஜியம். நர்மதா தேவி
வெளியீடு:-இடையன் இடைச்சி நூலகம், ஈரோடு. (98412 08152)
விலை:-ரூ 50/-
Share this: