சந்தனக் கூடு

Sandanakoodu_pic

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.

16 பக்கம் கொண்ட இந்நூலில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் இரண்டு கதைகள் உள்ளன. சந்தனக் கூடு என்ற முதல் கதையில் சாகுல் கந்தூரி திருவிழாவைப் பார்க்கத் தாத்தா ஊருக்குப் போகிறான். அங்கே சரண் என்ற பையனுக்கும் அவனுக்கும் ஏற்படும் மதம் தாண்டிய நேசத்தைப் பற்றி இக்கதை பேசுகின்றது. நெகிழித்துண்டு என்ற இரண்டாவது கதை மக்கும் குப்பை, மக்கா குப்பை பற்றிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சூழலியல் கதை.   

வகைசிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்கார்த்திகா கவின் குமார்
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-.
Share this: