பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தற்போது மேலும் 7 வாசிப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை ஒவ்வொன்றின் ரூ 20/- மட்டுமே. 08/01/2026 முதல் நடைபெறும் சென்னை 49வது புத்தககாட்சியில் புக்ஸ் ஃபார் சில்ரன் அரங்கு எண் 440இல் இவை கிடைக்கும்.
இவை பேராசிரியரும், கல்வியாளருமான ச.மாடசாமி அவர்களின் நேரடி வழிகாட்டலில் மிக எளிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தமிழை வாசிக்கத் திணறும் குழந்தைகளுக்கானவை.
இதனைச் சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கும், திரு நாகராஜ் தோழருக்கும், வண்ணமயமான அட்டைகளை உருவாக்கித் தந்த காளத்தி தோழருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.
தற்போது வெளியாகியுள்ள நூல்கள் & அதன் எழுத்தாளர்கள் விபரம் வருமாறு:-

சிறார் வாசிப்பு நூல்-24 – கல்வியாளர் வே.வசந்திதேவி – ஞா.கலையரசி

நூல் – 25 – வெயில் காலம் மழைக்காலம் – லைலா தேவி

நூல் – 26 – ஆயிரம் வாசல் – கொ.மா.கோ.இளங்கோ

நூல் – 27 – ஒளி வீசிய குடை – கன்னிக்கோவில் இராஜா

நூல் – 28 – மூன்று சக்கர சைக்கிள் – உமையவன்

நூல் – 29 – ஊருக்குள் வந்த ஒட்டகம் – அகிலாண்ட பாரதி

நூல் – 30 – பீட்-கேட் முயல்கள் – ராஜலெட்சுமி நாராயணசாமி
உங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த இந்த நூல்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
