பாட்டி பெயர் என்ன?

Paattiyin_pic

பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன.

‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது. ஆனால் அதே சமயம் ஒருவர் இன்னொருவர் மீது கொண்ட பாசத்துக்கும் குறைவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. எல்லார் வீட்டிலும் நடக்கும் யதார்த்த கதையிது!

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதையான ‘அணில்-சிலந்தி-காகம்’ அணிலின் உழைப்பு திருட்டுப் போனதையும், ‘திருட்டுப் பாதை ஜெயிக்காது’ என்பதையும் சுவாரசியமாகச் சொல்கிறது. 

சின்ன வயதில் பாட்டியின் மடியிலேயே வளரும் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு, அவர்களுக்குப் பாட்டியிடம் பேசக்கூட நேரம் இருப்பதில்லை என்பதைச் சொல்லும் கதை, “பாட்டி பெயர் என்ன?.” பாட்டியின் பெயரைக் கூடத் தெரிந்து வைக்காத பிள்ளைகள், அவரிடம் பேச விரும்பும் போது காலம் கடந்து விடுகிறது.

யாருமே வாங்கத் துணியாத சுடுகாடு அருகில், டீக்கடை வைத்துத் தம் உழைப்பால் முன்னேறுகிறான் மாசாணம். டீக்கடை பிரபலமானவுடன், அதற்குக் காரணமான அவனது கடும் உழைப்பைக் கருத்தில் கொள்ளாமல், அந்த இடத்தை ராசியான இடம் என்று, முட்டாள்தனமாகச் சிலர் நினைத்து, விலைக்கு வாங்க ஆசைப்படுவதைச் சொல்லும் கதை, ‘கைவிட்ட இடம்’. 

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்ச.மாடசாமி
வெளியீடு:-புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 8778073949
விலை:-ரூ 30/-

Share this: